புதுச்சேரி மேட்டுபாளையம் போலீஸ் கான்ஸ்டபுளின் அத்து மீறல்;
மேட்டுபாளையம் போலீஸ் கான்ஸ்டபுளின் அத்து மீறல் : இன்று   ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உணவளிக்க தன்னார்வலர் அடையாள அட்டை வாங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று இருந்தோம் தற்போது அடையாள அட்டை கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது நாங்கள் தேவைபடும் போது அழைக்கிறோம் என்று ஆட்சியர் அலுவலகத்தில் கூறினார்கள்  அதைமுடித்து கொண்டு வீட்டிற்கு கிளம்ப வழுதாவூர் ரோடு வழியாக குரும்பாபட்டு நோக்கி வந்து கொண்டிருந்தேன் அப்போது மேட்டுபாளையம் காவல்நிலைய வாசலில் பேரிகார்டு போட்டு வண்டியை மடக்கி கொண்டிருந்தனர், அங்கு பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபுள்கள் இருவர் காரில் போகும் கனவான்களை பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர் , டூவீளரில் போகும் நபர்களின் வண்டி சாவியை ஒரு போலீசார்  பிடுங்கினார் (அதில் மூவரசன் என்ற காவலர் அவரது பணியை சரியாக செய்தார் ) வண்டிசாவியை பிடுங்கிகொண்டு ரூ.200 கொடு சாவியை தருகிறேன் போய் ஓரமாக நில் என்றார் சார் நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வருகிறேன் என்று கூறியும் ஒருமையில் திட்டினார் உடனே அருகில் இருந்த போலீஸ் திரு.பழனிசாமி என்பவர்  சார் சோசியல் ஒர்க்கர் அவரை ஏன் நிற்க வைக்கின்றீர்கள் என்று சொல்லி எனது வண்டி சாவியை வாங்கி கொடுத்தார் நடந்தவற்றை மேட்டுபாளையம் உதவி ஆய்வாளர்கள் திருமதி.பிரியாமேடம் மற்றும் திரு.குமார் சார் ஆகியோறிடமும் தலைமை காவலர் திரு.சங்கர் அவர்களிடமும் கூறிவிட்டு 1031 நெம்பருக்கு போன் செய்து புகார் தெரிவித்தேன் விசாரித்த போது அந்த போலீஸ் கான்ஸ்டபுள் ஆய்வாளரின் டிரைவராம்(ஐயப்பன் என்று சொன்னார்கள் பெயர் பேட்ஜ் அனியவில்லை)  அனைவரிடமும் இப்படிதான் நடந்து கொள்வாராம்  மேலும் காவல் நிலையம் செல்லும் நபர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுகிறாராம்  "கொரோனா" என்ற உயிர்கொலிலி மக்களை அச்சுருத்தும் இந்த வேளையில் இப்படி வாகன ஓட்டிகளிடம் கனிவில்லாமல் நடந்து கொல்லும் கொரோனாக்களை என்ன செய்வது ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய தேவைக்காக செல்வோரை தடுத்து நிறுத்தி அறிவுறை வழங்காமல் இப்படி வழிப்பறி செய்பவர்கள் போல் நடந்து கொள்வது நியாயமாகுமா( குறிப்பு: நான் வெளியில் சென்றது அரசாங்கத்திடம் தன்னார்வலராக இணைத்து கொண்டு மக்கள் பணியாற்றவே இது தவறெனில் வழக்கு பதிவு செய்யட்ரும் எனக்கு முன்னால் பின்னால் நூற்றுக்கனக்கான வாகனங்கள் சென்றது குறிப்பிதக்கது )என்றும் சமூக அக்கறையுடன் K. டேவிட்ராஜ் (எ) லூர்துநாதன், புதுச்சேரி

" alt="" aria-hidden="true" />

Popular posts
காட்பாடியில் உணவுக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது
Image
மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கம்பம் போடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதி தனிமைப்படுத்தி கண்காணிப்பு
Image
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்
Image
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image